மனைவி மற்றும் மாமியாரை புரட்டி எடுத்த பிரபல நடிகர்? சோசியல் மீடியாவில் பரவும் வீடியோவால் பரபரப்பு!

குருஷேத்திரா பட புகழ் கன்னட நடிகர் தர்ஷன் தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் மாமியாரை தாக்கியதாக சமூக வளைதளத்தில் தகவல் பரவிய நிலையில் அவருக்கு நடிகரின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


தர்ஷன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை தாக்கிய தொடர்பான புகாரில் ஒரு மாதம் சிறையில் இருந்தார் அதேபோன்றதொரு புகார் தற்போது மீண்டும் எழுந்து உள்ளது.

அவர் தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் தனது மாமியாரை அவர்களது குடியிருப்பில் வைத்து தாக்கியதாக சமூகவலைதளத்தில் தகவல் மற்றும் வீடியோ பரவியது இதனால் விஜயலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல் பரவியது 

ஆனால் இதனை தனது ட்விட்டர் பதிவில் மறுத்துள்ள விஜயலட்சுமி இந்த தகவல் அடிப்படை ஆதாரமற்ற பொய் என்று தெரிவித்துள்ளார் ஆனால் தர்க்ஷனின் பல்வேறு ரசிகர்கள் விஜயலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்

இந்தச் சம்பவம் நடக்கவில்லை என்றால் மகிழ்ச்சி என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவ்வாறு நடந்திருந்தால் தர்ஷன் தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும் விஜயலட்சுமிக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதாகவும் ரசிகர்கள் பலர் பதிவிட்டுள்ளனர்   சமூக வலை தளங்களில் பரவும் வீடியோ ஜோடிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.