பெங்களூரு: கன்னட நடிகர் கோமல்குமார் சென்ற காரை மடக்கி தாக்கியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திடீரென குறுக்கே வந்த பைக்! சடன் பிரேக் போட்ட கார்! உள்ளே இருந்த நடிகருக்கு அடி உதை! பரபரப்பு சம்பவம்!
பெங்களூருவில் கன்னட நடிகர் கோமல்குமார் காரில் சென்றுகொண்டிருந்தார். மல்லேஸ்வரம் பகுதியில் அவர் சென்றபோது, திடீரென பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்துள்ளது.
ஆளில்லாத, ஸ்ரீராம் ரயில்வே சுரங்கப்பாலத்தில் காரை நிறுத்தச் செய்த அந்த நபர்கள், கோமல்குமாரை அடித்து காயப்படுத்தியுள்ளனர். என்ன காரணம் என்று தெரியாமல் இச்சம்பவம் நடைபெற்றதால் கோமல் குமார் அதிர்ச்சியடைந்தார்.
இச்சம்பவம் போலீஸ் நிலையம் அருகிலேயே நடைபெற்றதால், உடனடியாக, கோமல் குமாரின் சகோதரரும், நடிகருமான ஜக்கேஷ் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து வந்தபோது, அங்கிருந்தவர்களில் 2 பேர் தப்பியோடிவிட்டனர். எஞ்சிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். பட்டப்பகலில் நடிகர் தாக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.