நடிகர் சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த சேதுராமன் திடீரென மரணம் அடைந்துள்ளார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்பட நடிகர் திடீர் மரணம்..! 36 வயதில் உயிர் பிரிந்த பரிதாபம்! அதிர்ச்சி காரணம்!

தோல் சிகிச்சை நிபுணராகவும் சென்னையில் பல இடங்களில் மருத்துவமனைகளையும நடத்தி வருபவர் சேதுராமன். இவருக்கு சினிமா மீது அதிக ஆசை உண்டு. மேலும் நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர். இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இவர் நாயகனாக நடித்திருப்பார்.
இந்த படத்தின் மூலம் கிடைத்த புகழை தொடர்ந்து ஒன்று இரண்டு படங்களில் சேதுவுக்கு வாய்ப்பு கிடைத்தது- பிறகு வாய்ப்புகள் குறைந்த நிலையில் மீண்டும் தோல் சிகிச்சை நிபுணராக தனது பணியை தொடங்கினார். அண்ணா நகர், ஈசிஆரில் உள்ள கிளினுக்குகளில் பெரும்பாலும் நடிகர், நடிகைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சேது திடீரென மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 36. மாரடைப்பு ஏற்பட்டு சேது காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு திருமணமான சேதுவுக்கு ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.