நாடார் தொகுதியில் இசை வேளாளர் கனிமொழியா? திமுகவிற்கு எதிராக கொந்தளிக்கும் தூத்துக்குடி!

நாடார்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய தூத்துக்குடி தொகுதியில் இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த கனிமொழிக்கு சீட் கொடுத்து அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் எப்போதுமே நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தேசிய கட்சியாக இருந்தாலும் சரி மாநில கட்சியாக இருந்தாலும் சரி சீர் கொடுப்பது வழக்கம். அண்மைக்காலமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிகளில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆண்டுகளாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக பாஜக விற்கு வழங்கிவிட்டது. ஆனால் திமுகவும் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 

கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆனால் கனிமொழியின் தந்தையான கருணாநிதி இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 

பொது வாழ்விற்கு வந்த பிறகு கனிமொழி தன்னை நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகவே அடையாளப் படுத்தி வருகிறார். ஆனால் நாடார்களில் பெரும்பாலானவர்கள் கனிமொழியை தற்போதும் தங்கள் சமுதாயத்தை சேர்ந்த பெண்மணி என்று ஏற்க மறுக்கின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளது நாடார்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மாநகர் முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர். வெங்கடேச பண்ணையார் சுபாஷ் பண்ணையார் ராக்கெட் ராஜா போன்ற நாடார் சமுதாய பிரபலங்கள் புகைப்படங்களுடன் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதனால் தொகுதிக்குச் சென்று இறங்கிய உடனேயே கனிமொழி தலை வலியை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.