தேர்தல் வெற்றி! கனிமொழி - ஆ.ராசாவுக்கு திமுகவில் புதிய பதவி!

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழிக்கு திமுக புதிய பதவியை வழங்கியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்களின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிதாக தேர்வான எம்பிக்கள் மற்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

எம்பிக்கள் கூட்டத்தில திமுக நாடாளுமன்ற மக்களவை குழு தலைவராக ஸ்ரீபெரும்பதூர் எம்பியும் திமுக தலைமை நிலையச் செயலாளருமான டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டார். மக்களவை குழு துணைத் தலைவராக கலைஞரின் மகளும், ஸ்டாலினின் சகோதரியும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தேர்வானார்.

நாடாளுமன்ற மக்களவை திமுக கொறடாவாக அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் நீலகிரி எம்பியுமான ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டுள்ளார. மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக டி.கே.எஸ் இளங்கோவன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.