கனிமொழி, கார்த்தி மட்டும் தான் ஊழல் எம்பியா? வெளியானது பாஜக ஊழல் எம்பி பட்டியல்!

இப்போது இணையதளத்தில் வைரலாக பரவிவரும் விவகாரம் இதுதான்.


அதாவது தி.மு.க.வில் இருந்து ஏராளமான ஊழல் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் எல்லோர் மீதும் வழக்கு இருக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.இது, உண்மையா என்று ஆய்வு செய்தால் கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் அப்படித்தான் இருக்கிறது.

நேர்மையின் சிகரம் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க.வில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் எம்.பி.க்களும் ஊழல் பிசாசுகள்தானாம். ஏ.டி.ஆர். என்ற தன்னார்வ அமைப்பு புதிய நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட 539 எம்.பி.க்களின் பின்புலத்தை ஆய்வு செய்தது. இதில் பா.ஜ.க.வின் 303 எம்.பி.க்களில் 116 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கிறதாம்.

குறிப்பாக, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அடிதடி, அத்துமீறல் போன்ற அத்தனை வழக்குகளும் இருக்கிறதாம். ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை என்பார்கள், அப்படித்தான் இருக்கிறது பா.ஜ.க. படையின் கிரிமினல் விவகாரம்.