கனிமொழிக்கு 52 வயசா… நம்பமுடியவில்லையே! இனிமேல் அக்கா கனிமொழி!

தி.மு.க.வில் இருந்து அழகிரி விலகியதும் கனிமொழியும் விலக்கிவைக்கப் படுவார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென தன்னுடைய நிலையை மாற்றி ஸ்டாலினுக்கு ஆதரவுகொடுத்து தப்பிவிட்டார்.


ஒருவழியாக தி.மு.க.வில் சீட் கிடைத்து எம்.பி.யாகவும் ஆகிவிட்டார். ஸ்டாலினுக்குப் பிறகு கனிமொழி என்ற நிலை இருந்துவந்தது. உதயநிதியின் வரவுக்குப் பிறகு கனிமொழி காணாமல் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் இன்று தன்னுடைய 52வது பிறந்த நாளை கொண்டாடினார் கனிமொழி. ஆனால், பொதுவெளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, அதாவது கருணாநிதி மறைவுக்கு பிறகு தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து வருகிறார்.

எளிமையான முறையில் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திவிட்டு தனது அண்ணன் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறுவததோடு பிறந்தநாள் விழாவை நிறுத்திக்கொள்கிறார் கனிமொழி. இந்த ஆண்டு நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து போராட்டங்கள் நடக்கும் சூழலில் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்ப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே கனிமொழி அறிக்கை விட்டுவிட்டார்.

ஆனாலும், இன்று அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தன. மேலிட தலைவர்களும், கூட்டணி கட்சியினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கனிமொழிக்கு 52 வயசாச்சா? அப்படின்னா இனிமே அவங்களை அக்கா கனிமொழின்னு கூப்பிடுவோம் என்று மகளிர் மன்றங்கள் யோசனை செய்து வருகிறதாம்.

அக்காவுக்கு நாமும் வாழ்த்துக்களை சொல்லிவைப்போம்.