திருப்பதி ஏழுமலையானை பீட் செய்த காஞ்சிபுரம் அத்திவரதர்! எப்படி தெரியுமா?

காஞ்சிபுரம் அத்திவரதர் பக்தர்களின் எண்ணிக்கையில் திருப்பதி ஏழுமலையானை முந்தியுள்ளார்.


உலகிலேயே பணக்கார கடவுளாக கருதப்படுபவர் ஏழுமலையான். திருப்பதி ஏழுமலையானை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இதே போல் நாட்கணக்கில் காத்திருந்து ஏழுமலையான தரிசனம் செய்யும் பக்தர்கள் எல்லாம் உண்டு. குறைந்தது 12 மணி நேரம் காத்திருந்தால் தான் ஏழுமலையானை தரிசிக்க முடியும்.

இந்த அளவிற்கு ஏழுமலையானுக்கு பக்தர்கள் மத்தியில் டிமாண்ட் உண்டு. இந்த சமயத்தில் தான் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் கொடுத்தார். 48 நாட்கள் மட்டுமே அவர் தரிசனம் கொடுப்பார் எனவும் பிறகு 40 ஆண்டுகளுக்கு பிறகே அத்திவரதரை காண முடியும் என்றும் தகவல் பரவியது.

இதனால் மக்கள் அலை அலையாக அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அத்திவரதரை சுமார் 48 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். இதே கால கட்டத்தில் ஏழுமலையானை 26 லட்சம் பேர் தான் தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் லார்ட் பாலாஜியை அத்திவரதர் பீட் செய்துவிட்டார் என்றே கூறலாம். ஆனால் அத்திவரதர் இன்னும் இரண்டு வாரங்கள் தான் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.