அத்திவரதரை தரிசிக்க பட்டா கத்தியுடன் வந்த கும்பல்! அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்! காஞ்சிபுரம் பரபரப்பு!

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசன கூட்டத்தில் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த 4 இளைஞர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் தரிசனம் தொடங்கியதிலிருந்தே மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அப்பகுதியில் அதிக அளவு காவல்துறையினரும் பாதுகாப்பு படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். அத்திவரதர் தரிசனம் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காண முடியும் இந்த தரிசனத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் காஞ்சிபுரத்திற்கு படை எடுத்து வருகிறது.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 4500 பாதுகாப்பு படை வீரர்கள் காஞ்சிபுரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர் அது மட்டுமல்லாமல் வெளி மாவட்டத்தில் இருந்தும் சுமார் 3000 மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அத்திவரதர் தரிசனம் 37 ஆவது நாளான இன்று கூட்டம் கொஞ்சம் மிதமாகவே காணப்பட்டது.

இந்நிலையில்  வி ஐ பி மற்றும்  வி வி ஐ பி டிக்கெட்டுகளில் கூட்டம் குறைவாகவே இருந்துள்ளது இதை எடுத்து இதுவரை தரிசனம் பார்க்க வராதவர்கள் இன்று வந்து அத்திவரதரை தரிசித்து செல்கின்றனர்.

 இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வி ஐ பி காரர்களை பார்க் செய்யும் நுழைவாயில் முன்பு சோதனையில் ஈடுபட்ட போது அங்கு வந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் வந்துள்ளனர். அவர்களின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் இரண்டு பட்டாக்கத்தி இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து அங்கேயே உட்கார வைத்துள்ளனர். இந்நிலையில் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து காவல் துறை கண்காணிப்பாளர் அங்கு வந்தவுடன் அந்த நான்கு பேர்களிடம் விசாரணை நடத்த தொடங்கினார். இதையடுத்து அவர்கள் கூட்டத்தில் கலவரத்தை உண்டு பண்ண வந்தவர்களா? அல்லது கூட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய வந்தவர்களா?என்ற நோக்கில் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.