காரைக்குடி காளை அணியை தெறிக்க விட்டு வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி!

நேற்றைய TNPL போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை வென்றுள்ளது.


பாபா அபரஜித் தலைமையிலான விபி காஞ்சி வீரன்ஸ் அணியும், ஸ்ரீகாந்த் அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணியும் நேற்றைய போட்டியில் மோதின.

முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை குவித்தது. அந்த அணியின் சஞ்சய் யாதவ் அபாரமாக விளையாடி 95 ரன்களை குவித்தார்.காஞ்சி வீரன்ஸ் அணியின் சுனில் சாம் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய காரைக்குடி காளை அணியின் பேட்ஸ்மேன்கள், காஞ்சி வீரன்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் காரைக்குடி காளை அணி 67 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. காஞ்சி வீரன்ஸ் அணியின் ராஜகோபால் சதிஷ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதனால் காஞ்சி வீரன்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.