விலை போனாரா காடுவெட்டி குருவின் மகன் கனலரசன்..? பலே ராமதாஸ்! டென்ஷன் வேல்முருகன்!

வேல்முருகனை தி.மு.க. வளைக்கும் வரையிலும், காடுவெட்டி குரு மகன் கனலரசன் விவகாரத்தை ராமதாஸ் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.


ஆனால், வேல்முருகன் தி.மு.க.வில் சேர்ந்து வன்னியர் ஓட்டுக்களைப் பிரிப்பது உறுதியானது. அத்துடன் நில்லாமல் அவர் கனலரசனையும் தன்னுடைய பக்கம் பிடித்து இழுக்கிறார் என்று தெரிந்ததும்தான் ராமதாஸ் உஷாரானார்.

வேல்முருகனும், கனலரசனும் வன்னியர் ஓட்டுக்களை பிரித்தால் பா.ம.க. வேட்பாளர்கள் ஜெயிப்பது கடினம். அதனால் உடனே கனலரசனை சமாதானம் பேச அழைத்திருக்கிறார். ஆரம்பத்தில் கனலரசன் மறுத்தாலும், அவரது உறவினர் மூலமே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.

பேச்சுவார்த்தையின் முடிவுப்படி கனலரசனுக்கு சென்னையில் ஒரு வீடு மற்றும் கடன் அடைப்பதற்குத் தேவையான ஒட்டுமொத்த பணத்தையும் கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறதாம். இதுதவிர, சமீபத்தில் அவர் தினகரன், வேல்முருகன் போன்ற நபர்களிடம் இருந்து உதவிக்குப் பணம் வாங்கியதாகத் தெரிகிறது.

அப்படி வேறு கட்சியினரிடம் இருந்து பெற்ற பணத்தையும் திருப்பித்தருவதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டு பக்காவாக பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டதாம். ஆக, விரைவில் பா.ம.க.வை ஆதரித்து கனலரசன் பிரசாரம் செய்வதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அவருக்கு பா.ம.க.வில் முக்கியப் பொறுப்பு கொடுக்கவும் இருக்கிறார்களாம்.

தன்னுடைய வேட்பாளர் ஜெயிக்கணும்னா எப்படியெல்லாம் சமாதானம் பேசுறாங்க என்று குருவின் ஊர்க்காரர்கள் மாய்ந்துமாய்ந்து பேசுகிறார்கள்.