குருவின் மகன் தனிக் கட்சி உதயம். பா.ம.க.வில் இருந்து கனலரசன் எஸ்கேப்!

மிகவும் சிரமப்பட்டு காடுவெட்டி குருவின் மகன் கனலரசனை தங்கள் பக்கம் கொண்டுவந்து, குருவின் நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார் டாக்டர் ராமதாஸ். அப்போதே நெளிந்துகொன்டுதான் இருந்தார் கனலரசன்.


இப்போது அவர் பா.ம.க.வின் பிடியில் இருந்து விலகிவந்து, புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு செய்திருக்கிறார். ஆம், காடுவெட்டி குருவின் பிறந்த நாள் வரும் பிப்ரவரி 1ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

அந்த நேரத்தில் குருவின் மகன் கனலரசன், அவனது தாயார், சகோதரி ஆகியோர் ஒன்றிணைந்து புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறார்கள். அதாவது பா.ம.க.வின் பிடியில் இருந்து வெளியே வருவதுதான் கனலரசனின் முதல் லட்சியமாம். அதற்காகவே இப்போதே கட்சி தொடங்குகிறார்.

தற்போது கல்லூரி படித்துவரும் கனலரசன் படிப்பு முடியும் வரை தீவிரமாக கட்சிப் பணியில் ஈடுபட மாட்டாராம். அதுவரை அவரது மாமா, வி.ஜி.கே.மணி கட்சிப் பொறுப்புகளை கவனித்துக் கொள்வாராம். 

படிப்பு முடித்துவந்ததும் முழுமையாக கட்சி வேலைகளில் இறங்கி பா.ம.க.வை களத்தில் இருந்தே விரட்டுவோம் என்று சொல்கிறாராம் கனலரசன். பார்த்து சூதானமா நடந்துக்கோப்பா.