கமீலா நாசர் இப்படிப்பட்ட கொடுமைக்காரரா? அம்பலப்படுத்திய நாசரின் தம்பி!!

நாட்டு மக்களை திருத்தப்போகிறேன் என்று சினிமா தொழிலில் இருந்து அரசியல் களத்துக்கு வந்திருக்கும் கமல்ஹாசன், தன்னுடைய படையை இந்தத் தேர்தலில் களம் இறக்கியுள்ளார். அதில் ஒருவர்தான் கமீலா நாசர். அவரும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காக களத்தில் இறங்கிவிட்டார்.


இந்த நிலையில் நாசரின் தம்பிகள் இருவர் நியாயம் கேட்டு போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். பெற்றவர்களும் தம்பிகளும் இன்னமும் வறுமையில் இருக்கிறார்கள். நாசரின் ஒரு தம்பி மனநலம் தவறியவராக இருக்கிறார். அவர்களுக்கு முன்பு நாசர் சரியாக பணம் அனுப்பி கவனித்துக்கொண்டு இருந்தார்.

அந்த உதவிகளை முழுமையாக தடுத்து நிறுத்தியவர் கமீலா நாசர்தானாம். நாசர் என்ன சம்பாதிக்கிறார், என்ன பணம் வருகிறது என்று எதையும் கவனிப்பதில்லை என்பதால் எப்போதும் பஞ்சப்பாட்டு பாடி பத்துப் பைசாகூட அவரது தம்பிகளுக்கும் அம்மா, அப்பாவுக்கும் கொடுக்க விடுவதில்லையாம்.

இத்தனை கொடுமைக்கார கமீலா நாசர், தேர்தலில் நின்று ஜெயித்து நாட்டு மக்களுக்கு மட்டும் எப்படி நன்மை செய்வார் என்று நியாயமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

இதற்கு நாசரும், அவரது மனைவி கமீலா நாசரும்தான் பதில் சொல்ல வேண்டும்.