நான் ஆட்சிக்கு வந்தால் மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவேன், டாஸ்மாக்கை தனியாரிடம் ஒப்படைப்பேன் என்றெல்லாம் பேசிவந்த கமல்ஹாசன் இப்போது இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற புதிய திட்டம் குறித்துப் பேசியிருக்கிறார்.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தருவாராம் கமல்..! ஆனா, அவர் ஆட்சிக்கு வரணுமே…
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் நெல்லையில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, “மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையாக டெண்டர் விடப்படும்.லஞ்ச ஒழிப்பு மேல் மட்டத்திலிருந்து தொடங்க வேண்டும்; இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கப்படும். தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியலை நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மையத்தின் ஆசை.
அரசியலில் என்னை யாரும் இயக்கவில்லை ; என்னை யாரும் இயக்கவும் முடியாது. எங்கள் சின்னம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் டார்ச்லைட் சின்னத்தை நியாயமான முறையில் போராடி பெறுவோம். சட்டப்படி டார்ச் லைட் சின்னம் எங்களுக்கு கிடைக்க வேண்டும்.இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை நிறைவேற்றுவோம்.
ரஜினியுடன் கூட்டணி அமைத்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பேசி முடிவெடுப்போம்.மக்கள் நீதி மய்யத்தின் தலைமையில் 3வது அணி அமைய கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது.காந்தியாரின் பி-டீமாக தான் நாங்கள் இருப்போம்; வேறு யாருக்கும் நாங்கள் பி-டீம் அல்ல,' என்றார்.
பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்குது.