இணையவழிக் கல்வி திறமையான மாணவர்களை உருவாக்குமா? கமல்ஹாசன் எழுப்பிய சந்தேகம்.

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் மூலமாக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை ஐ.நா. சபைக்கு அழைத்து சென்று கல்வியில் புதுமை என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் செய்து அவர்கள் கருத்துகளை ஐ.நாவில் சமர்ப்பிக்கிற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் ,


இதன் ஒரு பணியாக இணையவழி ஆலோசனை கூட்டம் 1ம் தேதி நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மையத்தின் நிறுவன தலைவர் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்கள் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். 

இதில் பேசிய கமலஹாசன், "கல்வி என்பது வெறும் மதிப்பெண்ணுக்கு மட்டுமல்ல , அறிவே பிரதானம் அதை வளர்ப்பதற்கு, அதை வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள் புதிய மாற்றத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப அறிவைப் பெற்ற ஆசிரியராக இருக்க வேண்டும். எனக்கு கிடைத்த ஆசான்கள் மிக திறமைசாலிகள் குறிப்பாக பாலச்சந்தர் மற்றும் அனந்த் போன்றவர்கள் .

நாங்கள் 20 வருடம் கஷ்டப்பட்டு பெற்ற கல்வியை என்று இரண்டே வருடங்களில் மாணவர்கள் பெற்றுவிடுகிறார்கள் . அந்த அளவிற்கு கல்வியில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. குறிப்பாக ஊடகம் துறை சார்ந்த கல்வியில் புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு வகுப்பறை என்பது மாணவர்கள் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் மாணவர்களும் ஆசிரியர்களும் அதிகம் கலந்துரையாட வேண்டும் அதுவே சிறந்த வழியாக இருக்கும்.

இந்த உலகத்தை மாற்றுவதற்கு புதிய படைப்பாற்றல் திறன் மிக்க மாணவர்களை நாம் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்கள் சூரியனைப் போன்று பிரகாசிக்க தனக்குள் ஒரு நெருப்பை வரவைத்து அவர்கள் இலட்சியக் கனவுகளை அடைய ஏற்றார் போல் உழைக்க வேண்டும்.

இன்றைக்கு இணையவழிக் கல்வி முறை வேகமாக வளர்ந்து வந்தாலும் ,மாணவர்களுடைய தனித்திறன்களை வளர்ப்பதற்கு எந்த அளவுக்கு பயன்படும் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆசிரியர்கள் மாணவர்களோடு நேரடியாக கலந்துரையாடும் அனுபவத்தைத் எப்படி கொடுக்க முடியும் என்று தெரியவில்லை.

 மாணவர்கள் அறிவை பெற்றுக் கொள்ளலாம் ஆசிரியரிடமிருந்து நேரடி அனுபவத்தை பெற முடியுமா என்பது கேள்விக்குறி. மாணவர்கள் இருக்கும் இடத்திலிருந்து எந்த செயல்பாடுகளும் இல்லாமல் குறிப்பான எந்த பயிற்சிகள் ஏதும் இல்லாமல் பள்ளி இணையவழி கல்வி முறை இருக்கிறது.

இதையெல்லாம் புதிய தொழில்நுட்பங்களால் மாற்ற வேண்டும் அத்தோடு நேரடி கல்வி முறையை விரைவில் வரும் என்று நாம் நம்புகிறோம் புதிய படைப்பாற்றல் மிக்க மாணவர்களை உருவாக்குவோம் என்று நம்புகிறோம் ,நாளை நமதே என்று சிறப்புரையாற்றினார்."