ஸ்டாலினுடன் கைகோர்க்க கமல்ஹாசன் ரெடி! அதிர்ச்சியில் எடப்பாடி!

இதுவரை பா.ஜ.க. கொண்டுவந்த அத்தனை சட்டங்களையும் ஆதரித்தது போலவே குடியுரிமை திருத்த மசோதாவையும் அ.தி.மு.க. ஆதரித்தது.


ஆனால், இந்த விவகாரத்தில் அத்தனை கட்சிகளும் அ.தி.மு.க.வை கழுவிக்கழுவி ஊற்றுகின்றன. இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் அ.தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் பொளந்து கட்டினார். விவசாயிகள் தற்கொலையை தடுக்க வழிசெய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது அரசின் சூழ்ச்சி. பெண்கள் உயிர் பயத்தில் வாழும் நேரத்தில் அதை சரிசெய்யாமல், வாக்கு வங்கிக்காக சட்டப்பிழைகளைச் செய்கிறது மத்திய அரசு என்று குற்றம் சாட்டினார்.

நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நேரத்தல் குடியுரிமைச் சட்டத்திற்கான அவசரம் என்ன? ஆண்டாண்டு காலமாக தமிழகம் தோள்கொடுக்கும் என்று நம்பும் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்னவென்றும் கமல் கேள்வி எழுப்பினார்.

மாணவர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் இந்திய ஜனநாயகத்தின் கருத்துரிமையின் மேல் விழுந்த அடி. இங்கு மாணவனுக்கு பதிலில்லை, விவசாயிக்கு வாழ வழியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பொருளாதாரம் சரியில்லை, வேலைவாய்ப்பு இல்லவே இல்லை பிறகு எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம்? என்று கேள்வி எழுப்பிய கமல்ஹாசனிடம்,

இந்த சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திவரும் தி.மு.க.வுடன் இணைந்து போராடுவீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், ‘‘இது கட்சி, ஜாதி போன்ற எல்லைகளைக் கடந்தது. போராட்டத்தில் பங்கேற்கும்படி தங்களுக்கு அழைப்புவந்தால் கலந்துகொள்வோம்’’ என்று கமல் தெரிவித்தார். 

பொது பிரச்னையில் தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகுவதையும் அ.தி.மு.க.வுக்கு சிக்கல் எழுவதையும் கண்டு எடப்பாடி பழனிசாமி அதிர்ந்து நிற்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் இது எதிரொலிக்கும் என்றே தெரிகிறது.