காங்கிரஸ் கூட்டணிக்கு மீண்டும் ஆசைப்படும் கமல்ஹாசன்..! சினிமா இல்லை என்றதும் அரசியலுக்கு வந்துட்டார்.

இந்தியன் 2 விபத்து காரணமாக, இப்போதைக்குள் சூட்டிங் தொடங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சும்மா இருக்கும் கமல்ஹாசன், தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மீண்டும் கட்சி வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.


அதன்படி இன்று பத்திரிகையாளர்களிடம் பேசினார் கமல்ஹாசன். வழக்கம்போல் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது என்று மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தி இருக்கிறார். அப்படியென்றால் யாருடன் கூட்டணி ரஜினியுடன் மட்டும்தானா என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் கட்சி தொடங்கியதும் அது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதோடு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கான முயற்சியில் இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.

அடேங்கப்பா, இனிமேல் மக்கள் நீதி மய்யத்துக்கு ரொம்பவே ஜாலிதான். ஏனென்றால், தினமும் கட்சியை முன்னேற்றவும் நிறைய நடவடிக்கை எடுக்கப்போகிறாராம்.