நடிகர் கமல்ஹாசனுடன் பா.ஜ.க. கூட்டணியை உறுதி செய்தார் பிரதமர் மோடி..! எப்படின்னு தெரியுமா?

கொரோனா எதிர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திரமோடி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்த நேரத்தில், அவரோ அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.


ஆம், கமல்ஹாசனுக்கு கொடுக்கப்பட்டுள்ள டார்ச்லைட் சின்னத்தையே இந்திய மக்கள் அனைவரும் கையில் எடுக்கவேண்டும் என்று அறிவித்து இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்துக்கும் பா.ஜ.க.வுக்கும் இணைப்பு சாத்தியமில்லை என்று அறிந்தே, இப்படியொரு அறிவிப்பு வெளியானதாகச் சொல்கிறார்கள், பிரபல அரசியல் நோக்கர்கள்.

இந்த டார்ச்லைட் விளம்பரத்துக்காக பிரதமர் மோடிக்கு இன்று கமல்ஹாசன் நன்றி தெரிவிப்பார் என்று தெரியவந்துள்ளது. எப்படியோ கொரோனா துயரத்தில் இருக்கும் மக்களை திசை திருப்பிவிட்டார் நரேந்திரமோடி என்று பா.ஜ.க.வினர் மனதார பாராட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் டார்ச்லைட் அடித்தே தீருமா?