ஆயுதம் இல்லாமல் போருக்கு வீரர்களை அனுப்பலாமா? யாரை குறை சொல்கிறார் கமல்ஹாசன்.

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட தருணத்தில் இருந்து மத்திய, மாநில அரசுகளை நோக்கி பல்வேறு கேள்விகளைக் கேட்டு குடைச்சல் கொடுத்துவருகிறார் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன்.


கொரோனா விவகாரத்தில் மாநில அரசும் மத்திய அரசும் எடுக்கும் நடவடிக்கைகளை குறைகூற வேண்டாம் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்கும் நேரத்தில், தொடர்ந்து விமர்சனம் செய்வது கமல்ஹாசன் மட்டும்தான்.

சென்னை மாநகரில் காவல்துறையில் பணியாற்றும் காவல் துறையினருக்கு N-69 mask மற்றும் சானிடைசர் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க ஒரு துணை கமிஷனர் சரகத்திற்கு ரூ.1 லட்சம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது.

ஒரு மாஸ்க் தற்போது ரூ.120-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் ரூ.1 லட்சம் நிதியை வைத்து எத்தனை பேருக்கு இந்த மாஸ்க், சானிடைசர் உள்ளிட்டவை வழங்க முடியும் என்று காவல் துறையினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனை கணக்கிட்டுத்தான் கமல் ட்வீட் செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும்.

அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். என்ன செய்யப்போகிறது அரசு..?