இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து! முஸ்லிம்கள் மத்தியில் நடிகர் கமல் பிரச்சாரம்!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறி முஸ்லிம்கள் மத்தியில் நடிகர் கமல் பிரச்சாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அரவக்குறிச்சி தொகுதிகள் மக்கள் நீதி மையம் சார்பில் மோகன் ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகர் கமல் பிரச்சாரம் செய்து வந்தார். அரவக்குறிச்சியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கமல் பேசியதாவது: தற்போது நான் நின்று கொண்டிருக்கும் பகுதி முஸ்லிம்கள் அதிகமாக இருப்பது.

முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் தற்போது இதனை நான் கூறவில்லை. காந்தியடிகளின் கொள்ளுப் பேரனான இதனை நான் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே. இதனை கூறுவதில் நான் எப்போதும் தயங்குவதில்லை.

தீவிரவாதத்திற்கு மதம் எப்போதும் காரணமாக இருப்பதில்லை. தீவிரவாதிகள்தான் மதத்தை தங்களுக்கு காரணம் ஆக்கிக் கொள்கிறார்கள். மக்கள் மதம் கடந்து சிந்திக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு மதத்தை தீவிரவாதிகளாக சித்தரிக்க கூடாது.

இவ்வாறு கமல் அரவக்குறிச்சியில் பேசியுள்ளார். தனது திரைப்படங்களில் எல்லாம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் கமல் அரசியல் என்று வந்த பிறகு முஸ்லிம்கள் மத்தியில் இந்துவை முதல் தீவிரவாதி  என்று கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது என பாஜக உள்ளிட்ட கட்சிகள் எச்சரித்துள்ளனர்.