கோவை சரளாவை திட்டித் தீர்க்கும் கமல் நிர்வாகிகள்! ஏன்னு தெரியுமா?

யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென கமலஹாசனுக்கு ஆதரவு கொடுத்தார் கோவை சரளா. அதனால், வேட்பாளர் தேர்வு செய்யும்போது கோவை சரளாவையும் அமரவைத்து மரியாதை கொடுத்தார். அப்போதே சில சலசலப்புகள் எழுந்தன என்றாலும் அதை கமல் கண்டுகொள்ளவில்லை.


கமல்ஹாசன் கட்சியினருக்காக ஸ்ரீப்ரியா வீடு வீடாக போய் பிரசாரம் செய்தார். அதைப் போன்று கிட்டத்தட்ட அத்தனை நிர்வாகிகளும் பிரசாரம் செய்தார்கள். ஆனால், கோவை சரளா செய்த காரியம் என்ன தெரியுமா?

பெங்களூரு தொகுதியில் நிற்கும் பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவாக வாட்ஸ் ஆப் ஆடியோ வெளியிட்டு பேசினார். பிரகாஷ் ராஜ் மிகவும் நேர்மையான மனிதர், அவருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வெளிப்படையாகவே பிரசாரம் செய்தார்.

அதேபோன்று கமல்ஹாசன் பற்றியும் பேசச்சொல்லி நிர்வாகிகள் கேட்டார்களாம். அதற்கு கோவை சரளா, ‘பிரகாஷ் ராஜ் கேட்டார், அப்படி பேசினேன். அதேபோல நம்ம கமல்ஹாசனும் கேட்டா பேசுறேன்‘ என்று சொல்லிவிட்டாராம்.

டென்ஷனான நிர்வாகிகள் அப்போதே கமல்ஹாசனிடம் சொல்லியிருக்கிறார்கள். தேர்தல் முடிந்தபிறகு கவனிப்போம் என்று சொன்னாரம். அதனால் இப்போது கோவை சரளா பற்றி பேச்சு வந்திருக்கிறது. ‘அவங்களுக்கு பிரகாஷ்ராஜ்தான் முக்கியம்னா விட்ருங்க‘ என்று போயேவிட்டாராம்.