கேரள சேச்சி முன்பு கைகட்டி அமர்ந்திருந்த கமல்! காரணம் இதுதான்!

கேரள பெண்மணி ஒருவர் முன்பு நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல் கைதட்டி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.


நடந்து முடிந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ தன்யா. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவது என்பது வழக்கமாக நடைபெறுவதுதான் என்று நீங்கள் கூறுவது தெரிகிறது. ஆனால் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத பழங்குடியினர் பகுதியில் பிறந்த ஸ்ரீ தன்யா சுயமாக உழைத்து முன்னேறி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீ தன்யா தான் பழங்குடியினர் பிரிவில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக முதல் பெண்மணி என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த ராகுல் காந்தி தேர்வில் ஸ்ரீ தன்யா வெற்றி பெற்ற மறுநாளே வாழ்த்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஸ்ரீ தன்யா தான் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகை என்று கூறியிருந்தார். மேலும் கமலை சந்திக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

அப்போது கமல் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் கேரளாவில் இருந்து ஸ்ரீ தன்யாவை சென்னை அழைத்து வந்து கமல் சந்தித்துள்ளார்.

தனது வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஸ்ரீ தன்யா முன்பு கைகட்டி கமல் அமர்ந்திருந்தார். எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு தன்னுடைய தனித்திறனால் ஆட்சி செய்யக் கூடியவர் கமல். ஆனால் ஸ்ரீ தன்யாவுடன் மட்டும் கமல் கைகட்டி அமைந்ததற்கு காரணம் பழங்குடியின வகுப்பிலிருந்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஒரு மாணவி என்ன பேசுகிறார்கள் என்று கேட்பதற்கு தான் என்று அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.