சீமான் கட்சியை காலி செய்த கமல் கட்சி! அதிர்ச்சியில் அண்ணணின் தம்பிகள்!

கமலிடம் தோற்றுப்போன சீமான்! எதுவும் சுகப்படலையே ராஜா.


நான்காவது கட்சிக்கு தன்னைவிட்டால் யாருமே இல்லை என்று மீசையை முறுக்கியபடி உரக்க பேசிவந்தார் சீமான். அந்தப் பேச்சும், அவரை நம்பி பின்னே வரும் இளைஞர் படையும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், நேற்று வந்து கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், சீமானை வீழ்த்திவிட்டு முன்னேறிவிட்டார்.

இந்தத் தேர்தலில் சீமானின் நாம்தமிழர் கட்சி 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை பெற்றுள்ளனர், அதாவது சுமார் 15 இலடசம் வாக்குகள் என்று கணிக்கப்பட்டுள்ளது, ஒருசில தொகுதிகளில் மூன்றாம் இடத்திலும், பல இடங்களில் நான்காம் நிலையிலும், பெரும்பாலான தொகுதியில் ஐந்தாம் இடத்திலும் நிற்கிறார்கள்.

அதாவது பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. ஆகியவை தனிப்பெரும்பான்மையுடன் திகழ்கின்றன. அடுத்தபடியாக பெரும் பலத்துடன் வருவார் என்று கணிக்கப்பட்ட தினகரனுடன் சீமானும் கமல்ஹாசனும் போட்டியிட்டுள்ளார்கள். மூன்றாவது இடத்துக்குப் போட்டியிட்ட மூன்று பேருக்குள், மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் சீமான்.

ஆக, ஐந்தாவது இடத்தை உறுதி படுத்தியிருக்கும் சீமானின் எதிர்காலம் என்னவாகும் என்பதுதான் அவரது தம்பிகளின் கவலை. இதேபோன்று ஏட்டிக்குப் போட்டியாக பேசிக்கொண்டு, கெட்ட வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டே காலத்தைப் போக்கமுடியுமா என்று தம்பிகள் யோசிக்க வேண்டிய நேரம் இது. சீமானுக்கு ஜாலிதான், விடிய விடிய பேசிக்கொண்டே பொழுதைப் போக்கிவிடுவார், ஆனால், அவரை நம்பியிருக்கும் மற்றவர்கள், இருக்கும் காசை செலவழித்து கட்சியை வளர்ப்பவர்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது.