கோவை சிறுமியை கண்டுகொள்ளாத எடப்பாடி & ஸ்டாலின்! நேரில் சென்று நெகிழச் செய்த கமல்!

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்த சிறுமியை எடப்பாடி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் யாரும் கண்டுகொள்ளவில்லை.


டெல்லியில் நிர்பயா எனும் மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு சிறிதும் குறைவில்லாமல் மிகக் கொடூரமாக 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கோவையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொடூரக்கொலை நிகழ்ந்து 4 நாட்கள் ஆன நிலையிலும் தற்போது வரை போலீசார் ஒருவரைக்கூட கைது செய்யவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரை மட்டும் விசாரித்துவருகின்றனர் போலீஸ்.

வழக்கமாக இது போன்று ஏதேனும் ஒரு பாலியல் அவலம் நடைபெறும்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் மு க ஸ்டாலின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அங்கு சென்று அரசியல் செய்வது வழக்கம்.

ஆனால் இது தேர்தல் காலம் என்பதால் அனைவரும் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக உள்ளனர். இந்த நிலையில்தான் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் இன்றைய பிரச்சாரத்தை எல்லாம் ரத்து செய்துவிட்டு கோவை சென்று சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சிறுமி தொடர்பான வழக்கில் தேவையான செலவை மக்கள் நீதி மையம் ஏற்கும் என்று தன்னுடைய மாவட்ட நிர்வாகி மூலம் அந்த குடும்பத்திற்கு உறுதியளித்துள்ளார் கமல். மேலும் கொலைக் குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தலைமுறை தலைமுறையாக அரசியல் இருப்பவர்கள் கூட ஒரு சிறுமிக்கு ஏற்பட்ட அவலத்தை கண்டு கொள்ளாத நிலையில் நேற்று அரசியலுக்கு வந்த கமல் கண்டுகொண்டு இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது அனைத்து தரப்பினரையும் அவர் மீது மதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.