கோவையில் தப்பித்த கமல்ஹாசன்!! மாட்டிக்கொண்ட கமீலா நாசர், காமெடி கோவை சரளா!!

நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது போலவே பில்டப் கொடுத்துவந்தார் கமல்ஹாசன். அதனாலே, அந்த அறிவிப்பை கோவையில் பிரமாண்டமாக வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார் கமல்ஹாசன்.


ரேம்ப் வாக் போன்று மேடை அமைத்து, பள்ளி  மாணவர்கள் நடத்துவது போன்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி ஏகமாய் மக்களை கோவைக்கு வரவழைத்தார் கமல்ஹாசன். எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பதை அறிந்துகொள்ள கட்சியினரும் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால், மிகவும் விவரமாக போட்டியிடாமல் தப்பித்துவிட்டார். நாற்பது தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் வேலை பார்க்க இருப்பதாக சொல்லி சமாளித்தார். இந்த விவகாரம் முன்கூட்டியே வெளியிட்டால் பிரச்னை வரும் என்பதாலே தாமதமாக விழா மேடைக்கு வந்து அவசரம் அவசரமாக அறிவித்து வெளியேறினார்.

இந்த விவகாரத்தில் இப்போது கடும் டென்ஷனில் இருப்பது கமீலா நாசர்தான். ஏனென்றால் கமல்ஹாசனும் தேர்தலில் நிற்கப்போவதாக சொன்ன நம்பிக்கையில்தான் கமீலா நிற்பதற்கு சம்மதித்தார். அவர் கமலிடம் நியாயம் கேட்க, ‘உங்க தொகுதியில் நான் பிரசாரம் செய்யணும், அதுக்காகத்தான் நான் தேர்தலில் நிற்கவில்லை’ என்று சொன்னாராம்.

இதைக் கேட்டு புல்லரிப்பான கோவை சரளா, ‘நானும் பிரசாரம் பண்றேன், நிச்சயமா ஜெயிச்சுடலாம்.... தைரியமா நில்லு கண்ணு’ என்று குலுங்கிக்குலுங்கி சிரித்தாராம். 

நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கிறார் கமீலா நாசர்.