கமல் கட்சி நெல்லையில் காலியாப் போச்சு! தன்னந்தனியே வாக்கு சேகரிக்கும் வெண்ணிமலை!!

கடந்த முறை நெல்லைக்கு கமல்ஹாசன் வரும்போதே கட்சியினருக்கு கடும் எரிச்சல். ஏனென்றால் ம.நீ.ம. அருணாசலத்தின் அட்ராசிட்டி காரணமாக லோக்கல் கட்சியினர் யாருமே கமல் பக்கத்தில்கூட நெருங்க முடியவில்லை.


இந்த நிலையில் நெல்லை தொகுதிக்கு வேட்பாளராக வெண்ணிமலையை அறிவித்தபோதே மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். ஆனாலும் கமல்ஹாசன் கண்டுகொள்ளவே இல்லை.


இந்த நிலையில்தான் வேட்பாளர் வெண்ணிமலையை பிரசாரம் செய்வதற்கு மாவட்டச் செயலாளர்கள் அழைத்திருக்கிறார்கள். அவர் பொடி நடையாக நாம் நடந்துசென்று வாக்கு சேகரிப்போம் என்று சொன்னாராம்.


வாகனம் வைத்து,கொடி கட்டி, கட்சித் தொண்டர்களுடன் வாக்கு சேகரிக்கச் சென்றால்தான் பல்வேறு இடங்களுக்கும் செல்லமுடியும் என்று நெல்லை மாவட்டச் செயலாளர் செந்தில்குமாரும், நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கருணாகர ராஜாவும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

உடனே, அப்படியெல்லாம் செலவு செய்யமுடியாது. நடந்தே என்கூட வர்றதுன்னா வாங்க, இல்லைன்னா உங்க வழியிலே போங்க என்று சொல்லிவிட்டாராம். தலைமைக்குப் புகார் அனுப்பினார்களாம். ஆனால், தலைமையும் கண்டுகொள்ளவில்லை.


அதனால் செந்தில்குமார் மற்றும் கருணாகரராஜாவும் ம.நீ.ம. பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்கள்.அவர்களைத் தொடர்ந்து மற்ற நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக கட்சியைக் கலைக்கும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளார்களாம்.


இது எதையும் கண்டுகொள்ளாமல் தனி ஒருவனாக வெண்ணிமலை ஓட்டு சேகரிப்பதுதான் இப்போ ஹைலைட்.