கமல் வீடு குடுத்தாரு.. ரஜினி ராகவேந்திரா மண்டபம் குடுப்பாரா..? விஜய்யும் அஜித்தும் கப்சிப்..?

கொரோனா தாக்குதல் தொடங்கியதும் நடிகர் பார்த்திபன், தன்னுடைய வீட்டை கொரோனா மருத்துவமனையாக மாற்றுவதற்குத் தருகிறேன் என்று தொடங்கிவைத்தார். அதன்பிறகுதான் இந்த விவகாரம் சூடு பிடித்தது.


உடனே கமல்ஹாசன், தன்னுடைய வீட்டை தற்காலிக மருத்துவமனையாக மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்து அரசுக்கு விருப்பம் தெரிவித்தார். அவரது விருப்பத்தை அரசு இன்னமும் ஏற்கவில்லை என்பதுதான் உண்மை.

இந்த நேரத்தில் சமூக வலைதளங்கில் ஒரு செய்தி பரபரப்பாக பரவி வருகிறது. அதாவது, கமல்ஹாசன் வீட்டைக் கொடுத்தது போன்று, ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை கொரோனா ட்ரீட்மெண்ட்டுக்காக ரஜினி கொடுக்கப் போகிறார் என்பதுதான் அது.

இப்போது எந்த திருமணமும் நிகழ்ச்சியும் அந்த கல்யாண மண்டபத்தில் நடப்பதில்லை. பிறகு எதற்காக அதை பூட்டி வைத்திருக்க வேண்டும். கொடுத்துவிடலாம் என்று ரஜினி நினைக்கிறாராம். 

நடிகர் விஜக்கும் கல்யாண மண்டபம் இருக்கிறது. அஜித்துக்கு கல்யாண மண்டபம் எதுவும் இல்லை என்றாலும் வீடுகள் வாங்கிப் போட்டிருக்கிறார் இவர்கள் இருவரும் வீடு அல்லது கல்யாண மண்டபம் கொடுப்பது குறித்து வாயைக்கூட திறக்கவில்லை.