கமல்ஹாசன் என்ன பேசினாலும், அதில் குற்றம் கண்டுபிடித்து வம்புசெய்யும் வேலையில் தீவிரமாக இருப்பவர் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா. அவர் சமீபத்தில் கும்பகோணத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ‘கமஹாசன் கிறிஸ்தவ மத்திற்கு மாறிவிட்டார் என்று அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார்.
கமல் குடும்பமே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டது! ஹெச். ராஜாவின் அடுத்த அக்கப்போர்!

கமல்ஹாசன் மட்டுமல்ல, அவரது குடும்பமே கிறிஸ்த மதத்திற்கு மாறிவிட்டது. அதனால்தான் இந்து தெய்வங்களை நிந்தித்து கிறிஸ்தவ மதத்தை பரப்பி வருவதாக தெரிவித்து இருக்கிறார் ராஜா.
இவர் ஏற்கெனவே விஜய் பற்றியும் சீமான் பற்றியும் இதேபோன்று செய்தி வெளியிட்டவர்தான். இப்போது கமல் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாக தெரிவித்திருக்கும் ராஜா, கமல் யோக்கியதை குறித்து கேட்கவேண்டியவர்களின் பட்டியலும் வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஸ்ரீப்ரியா, வாணி கணபதி, சரிகா, சிம்ரன், கெளதமி, தயாரிப்பாளர் தாணு, ஹே ராம் பரத் ஷா, எஸ்.ஏ.ராஜ்கண்ணு, லிங்குசாமி என்று பட்டியல் போட்டிருக்கிறார். மதமே இல்லை என்று புரியாதபடி சொல்லிக்கொண்டிருக்கும் கமல் இந்த கிறிஸ்தவ மத பஞ்சாயத்துக்கு என்ன பதில் சொல்லப்போகிறாரோ..?