சீமானுடன் மோதும் கல்யாண சுந்தரம்.. நாம் தமிழர் கட்சிக்குள் என்னதான் பிரச்னை..?

நாம் தமிழர் கட்சியில் முக்கியப் புள்ளியாக விளங்கிவரும் பேராசிரியர் கல்யாணசுந்தரத்தை கட்சியில் இருந்து வெளியேற்றும் பணியை சீமான் செய்வதாக தொடர்ந்து பல செய்திகள் வெளியாகிவருகின்றன.


இந்த நேரத்தில், கல்யாணசுந்தரம் பத்திரிகையாளர் செந்தில்வேலுக்கு ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் பிரச்னை வெளிக்காட்டும் அந்த பேட்டி குறித்து தன்னுடைய பதிவை வெளிட்டுள்ளார் தொல்காப்பியன்.

“நாம் தமிழர் என்பது கட்சியா அல்லது ரசிகர் மன்றமா?” என்பது அந்த நிகழ்ச்சியின் தலைப்பு. இந்த பேட்டியை நான் முழுமையாக பார்த்தேன். இந்த பேட்டி நமக்குச் சொல்வது என்ன என்றால், கட்சியில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமானின் செல்வாக்கை அல்லது ஆதிக்கத்தை கலயாணசுந்தர்ம் போன்றவர்கள் எதிர்த்து வருகிறார்கள் என்பதுதான்.

பேட்டியின் எடுத்த எடுப்பிலேயே ‘சீமானிசம்’ என்று ஒன்று இல்லை.அப்படி இருக்கவும் கூடாது என்று கலயாணசுந்தரம் ஆணித்தரமாக தனது கருத்தை வைக்கிறார்.பிரச்சினையின் அடிப்படையே திரு.கல்யாணசுந்தரத்தின் இந்த மன நிலைதான் என்பது நன்றாக வெளிப்படுகிறது.

ஜூனியர் விகடனில் கடிதம் வெளி வந்ததற்கும், சவுக்கு சங்கர் ட்விட்டர் போட்டதற்கும், சுந்தரவள்ளி தன்னைப் பற்றி கருத்துப் பதிவு போட்டதற்கும் கட்சிதான் காரணம் என்கிறார் கல்யாணசுந்தரம். அதாவது இதன் பின்னணியில் சீமான் இருப்பதாக கல்யாணசுந்தரம் கருதுவதாக தெரிகிறது. கட்சியில் இருந்து தன்னை வெளியேற்ற தலைவர் சீமான் முயற்சிக்கிறார் என்று வருத்தமுடன் கூறுகிறார், கல்யாணசுந்தரம்.

‘கல்யாணசுந்தரத்தை நிகழ்ச்சிக்கு அழைக்காதீர்கள்; அவர் வந்தாலும் அவரை சேர்க்காதீர்கள்’ என்று சீமான் கட்டளை இட்டு இருப்பதாக கல்யாணசுந்தரம் வாக்குமூலம் கொடுக்கிறார். கல்யாணசுந்தரம் மன உளைச்சலில் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. அவர் மனதளவில் நாம் தமிழர் இயக்கத்தை விட்டு வெளியெறி விட்டதை அவரது பேச்சும் உடல் மொழியும் காட்டுகிறது. 

கல்யாணசுந்தரத்தை இழப்பது நாம் தமிழர் இயக்கத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை திரு.சீமானும் நாம் தமிழர் இயக்கத் தோழர்களும் புரிந்து கொண்டு அவருடன் சமாதானமாக போக வேண்டும் என்பதே நமது கருத்து என்கிறார்