தந்தி டிவியை கலாநிதி மாறன் வாங்கிவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
தந்தி டி.வி கலாநிதி மாறனிடம் கைமாறிவிட்டது! வைரல் தகவலின் உண்மை பின்னணி!

இன்றைய தினம் தமிழகத்தில் உலாவரும் வாட்ஸ் அப்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருப்பது, மீடியாக்களை ஒட்டுமொத்தமாக தி.மு.க. கைப்பற்றிவிட்டது என்பது குறித்த ஒன்றுதான். அதில்தான் தந்தி தொலைக்காட்சியை சன் குரூப் வாங்கிவிட்டது என்று தெரிவித்திருக்கிறார்கள். இதோ, அந்த வாட்ஸ் அப்.தந்தி டிவி 80% பங்குகளை சன் நெட்வொர்க் (மீடியா மாபியா) வாங்கிவிட்டது
அதனால் இனிமேல் தந்தி டிவி பார்ப்பதற்கு பதிலாக கலைஞர் குடும்பத்தில் உங்களுக்கு பிடித்த நபர்களின் போட்டோவைப் பார்த்தாலே போதும். நூறு வருடங்களுக்கு மேலாக பத்திரிக்கை துறையில் இருந்த தந்தி டிவி மீடியா மாபியாக்களின் முன் தாக்கு பிடிக்க முடியாமல் தமிழ்நாட்டுல கத்தியைக் கீழே போட்டுட்டாங்க( நான் சொல்ற கத்தி- பேனா) ரங்கராஜ் பாண்டே வெளியே வரும்போது எனக்கு பொறி தட்டுச்சு, இது இப்போ உண்மையாய் போச்சு.
இந்த லயோலா காலேஜ் சர்வே என்று புரளி கிளப்பியது ஒரு முடிவுக்கு வந்துள்ளது இதை யார் பின்னணியிலிருந்து இயக்கி இருப்பார்கள் என்பது உங்களுக்குப் புரியும். மேலும் நியூஸ்7 பத்தி நீங்க கேட்கவே வேண்டியதில்லை கனிமவள மாபியா நடத்தும் சேனல், புதிய தலைமுறை பற்றி சொல்லவில்லையே என்று வருத்தப்படாதீர்கள் அது கல்வி மாபியா நடத்தும் சேனல். இப்படியே சொல்லிக்கிட்டே போலாம் டைம் தான் இல்ல, ஒரு நியூஸ் சேனல் நடத்துவதற்கு மாதம் குறைந்தது ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடி ரூபாய் வருமானமே இல்லாமல் செலவு செய்ய வேண்டும்.
இதற்கு ஒரே வழி குறுக்கு வழியில் பணம் சம்பாதித்த பண முதலைகளின் பணத்தினால் மட்டுமே தொலைக்காட்சி நடத்த முடியும். ஏனென்றால் தாங்கள் செய்யும் தவறுகளை மற்ற நியூஸ் சேனல்கள் தட்டிக் கேட்காமல் இருப்பதற்கு நாமலே ஒரு நியூஸ் சேனல் நடத்தலாம் என்பதுதான் திட்டம். அந்த திட்டத்தை தான் செயல்படுத்தி வருகிறார்கள் தமிழ்நாட்டில்.
உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது அப்புறம் எந்த சேனலை தான் பார்க்கிறது இதற்கு ஒரே வழி எல்லா சேனலையும் பார்த்து உண்மையை நீங்கதான் புரிஞ்சுக்கணும். இல்லையென்றால் நல்ல நியூஸ் பேப்பரை வாங்கி படிங்க. இந்தியாவிலே அதிகமா சாட்டிலைட் சேனல் இருக்கும் இடம் நம்ம தமிழ்நாட்டில் தாங்க, ஒவ்வொருத்தனும் திருடிய காசை காப்பாற்றுவதற்கு ஒவ்வொரு சேனல். வெளிநாட்டில் இருந்து காசு வாங்குவதற்கு சேனல் நடத்தற ஊரு நம்மூர் தானுங்கோ. எவ்வளவு அடிச்சாலும் நம்ம தமிழ் மக்கள் தாங்கிக்குவாங்க. எலக்சன் டைம் கரெக்டா வீடு விட பணம் கொடுத்தால் போதும்.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக உள்ள பத்திரிகை துறை தமிழ்நாட்டில் முழுவதும் மாபியாக்கள் கைகளில் உள்ளது. வாழ்க ஜனநாயகம் வளர்க நமது தமிழ் மீடியா _ என்று அந்த வாட்ஸ் அப் முடிவடைகிறது. இந்த வாட்ஸ் அப் செய்தி உண்மையாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும், சமீபத்தில் அனைத்து மீடியாகளிலும் தி.மு.க.வுக்கு ஆதரவாகவே கருத்துக்கணிப்பு வெளியாகி வருவதால், கடுப்பான அ.தி.மு.க.வினரின் வேலை என்கிறார்கள்.
நல்லா செய்றாங்கப்பா...