எம்ஜிஆர்-இந்திராவுக்கு எப்போதும் சிம்ம சொப்பனம் கலைஞர்! சிறப்பு கட்டுரை!

எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரையிலும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை என்றாலும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரை படுதோல்வி அடையச் செய்திருக்கிறார்.


மேலும் எம்.ஜி.ஆர். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து டென்ஷனை உருவாக்கியிருக்கிறார். திருச்செந்தூர் ஆலய அதிகாரி கொலைவழக்கு விசாரணையை வெளியிட எம்.ஜி.ஆர். தயங்கியபோது, அந்த அறிக்கையை பத்திரிகையில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பத்திரிகையாளர். அதன்பிறகு கொலைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீதிகேட்டு நெடும்பயணம் செய்து அரசியல் சூடு கிளப்பினார். எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருந்த அரசியல் வித்தகர்.

இந்திராவின் பிரியமான எதிரி இந்திராகாந்தி மிசா நெருக்கடி நிலை அறிவித்த நேரத்தில், அதனை முழுமூச்சாக எதிர்த்தவர் கருணாநிதி. முரசொலி மாறன், ஸ்டாலின் போன்றவர்களை கைது செய்து சிறையில் கொடுமைப்படுத்திய நேரத்திலும் தன்னுடைய எதிர்ப்பை கருணாநிதி கைவிடவே இல்லை. டெல்லியில் இருந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தவந்த காங்கிரஸ் தலைவர்களிடமும் கருணாநிதி பணிவு காட்டவில்லை. மெரினா கடற்கரையில் மீட்டிங் போட்டு, பொதுமேடையிலே நெருக்கடி நிலையை வாபஸ் பெறவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதனாலே கருணாநிதி ஆட்சி கலைக்கும் சூழல் ஏற்பட்டது. எந்த இந்திராகாந்தியை நெருக்கடி நிலைக்காக கடுமையாக எதிர்த்தாரோ, அதே கருணாநிதி அவரை ஆதரிக்கவும் செய்தார். நெருக்கடி நிலைக்கு இந்திராகாந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டதும், நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சி தருக என்று அழைத்தார் அரசியல் சூத்ரதாரி.