திமுக தலைவர் கலைஞருக்கு மிகவும் பிடித்தமான பெண்மணி ஒருவர் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்.
தினகரன் கட்சியில் கலைஞரின் மானாட மயிலாட நடிகை! அதிர்ச்சியில் திமுகவினர்!

கலைஞர் டிவி துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் கலைஞர் டிவி என்றாலே நினைவுக்கு வருவது மானாட மயிலாட நிகழ்ச்சி தான். இந்த மாநாடு மயிலாட நிகழ்ச்சியை வழங்கி வந்தவர் கலா மாஸ்டர்.
திமுக தலைவர் கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோதுகூட கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து விடுவார். இதனை பேட்டிகளில் கூட கலைஞர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
கலைஞர் மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்ப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் கூட கடுமையாக விமர்சித்து இருப்பார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட மார்பாட மயிலாட என்று கூறி இதனைத்தான் கலைஞர் பார்க்கிறார் என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆனால் அதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கலைஞர் டிவியில் மானாட மயிலாட தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. கடந்த சில ஆண்டுகளாக மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.
இந்த நிலையில் மானாட மயிலாட நிகழ்ச்சியை வழங்கி வந்த கலா மாஸ்டர் திடீரென டிடிவி தினகரனை சந்தித்து அவரது கட்சியில் இணைந்துள்ளார். தினகரனின் அரசியல் பார்வை மற்றும் அவர் குறித்து மற்றவர்களின் தகவல்கள் தனக்கு பிடித்துப்போய் கட்சிகள் சேர்ந்துள்ளதாக கலா மாஸ்டர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் கட்சி வேட்பாளர்களுக்காக தான் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளார். என்னதான் பிரபலமான டான்ஸ் மாஸ்டராக இருந்தாலும் கலைஞர் டிவிக்கு வந்த பிறகுதான் பிரபலமானார். ஆனால் அவர் தற்போது தினகரன் கட்சியில் சேர்ந்து இருப்பது திமுகவினருக்கு கடுப்பை தந்துள்ளது.