மர்மமான முறையில் உயிரிழந்த காமெடி நடிகர்! சிலையில் இருந்து வடிந்த ரத்தம்! பீதியில் மக்கள்!

கலாபவன் மணியின் சிலையில் இருந்து ரத்தம் வழிந்ததாக பீதி கிளம்பியுள்ளது.


தமிழ் மற்றும் மலையாள சினிமா மறக்க முடியாத நடிகர் கலாபவன் மணி. குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் பட்டையைக் கிளப்பியவர் இவர். 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கலாபவன் மணி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவரது சொந்த ஊரான சாலக்குடியில் கலாபவன் மணிக்கு சிலை வைக்கப்பட்டது. அந்தச் சிலையின் கையில் இருந்து ரத்தம் வடிவதாக அண்மையில் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியது. இந்தச் செய்தி அந்த சிலையை செய்த சிற்பியை சென்றடைந்தது. அவர் வந்து சிலையை ஆராய்ச்சி செய்தார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் போன்ற திரவம் வழிவதற்கான காரணம் தெரிய வந்தது. கடந்த ஆண்டு கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது அந்த சிலைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அது உள்ளே இருந்த இரும்பை துருப்பிடிக்க செய்தது. அது ஒருபுறமிருக்க தற்போது அடிக்கும் வெயில் காரணமாக சிலையின் பைபர் உருகவே, அந்த நீர் துருவுடன் இணைந்து ரத்த நிறத்தில் வெளியேறியுள்ளது. இதைக் கேட்டவுடன் தான் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.