கள் இறக்குவதை அரசு வேலை ஆக்குவோம்! சீமானின் அடடே வாக்குறுதி!

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள் இறக்குவதை அரசு வேலை ஆக்குவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சீமான் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நெல்லையில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பேசியதாவது:-

தற்போதைய சூழலில் எந்தக் கட்சியும் மக்களுக்கு தேவையானதை செய்ய தயாராக இல்லை. செல்போன் லேப்டாப் கார் போன்றவற்றை தான் மக்களுக்கு இலவசமாக கொடுக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் மக்களுக்கு தேவையான உணவு தானியங்களின் விலை அதிகரித்து வருகிறது.

இதையெல்லாம் போக்க வேண்டும் என்றால் விவசாயத்தை அரசு வேலை ஆக்க வேண்டும். நிலம் இல்லாதவர்களுக்கு அரசு நிலம் கொடுத்து விவசாயம் செய்ய வைத்து மாதச் சம்பளம் கொடுக்க வேண்டும். இந்தத் திட்டங்கள் எல்லாம் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறைப்படுத்தப்படும்.

குறிப்பாக தென்னை பனை மரம் ஏறி கள் இறக்கிக் அவர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படுவர். அவர்களுக்கு மாத ஊதியம் கொடுக்கப்படும். இதைப்போல் பட்டுப்பூச்சி வளர்ப்பவர்கள் ஆடு மாடு வளர்ப்பு அவர்களையும் கூட அரசுப் பணியாளர்கள் ஆக்குவோம்.

இதற்கெல்லாம் எப்படி சம்பளம் கொடுப்பீர்கள் என்று கேட்கலாம். இந்த வேலைகள் மூலம் வரும் வருமானத்தை கொண்டு சம்பளம் கொடுப்போம். mba படித்தவனை டாஸ்மாக் பாரில் வேலை பார்க்க வைத்து இந்த அரசு சம்பளம் கொடுக்கவில்லையா? அந்த வகையில் கல் இறக்க பவர்களுக்கும் கல்லை விற்பனை செய்து நாங்கள் சம்பளம் கொடுப்போம்.

இவ்வாறு அந்த பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசினார்.