"அது" அணியாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை காஜல்! அசர வைக்கும் காரணம்!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கு என்று பெரும் புகழையும் திரளான ரசிகர் கூட்டத்தையும் கொண்டிருப்பவர் என்றே கூறலாம்.


இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோருடன் நடித்து பெரும் புகழை பெற்று உள்ளார். இதேபோல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காஜல் அகர்வால்  சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்ககூடிய நடிகைகளில் ஒருவர்.  இவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இவர் தன்னுடைய இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.  அந்த இரு புகைப்படங்களில் நடிகை காஜல் சிறிது கூட மேக்கப் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். பொதுவாக நடிகைகள் யாருமே மேக்கப் போடுவதையே விரும்புவர்.  அனால் இவரோ மேக்கப் அணியாமல் புகைப்படம் எடுத்து அதனை மிகுந்த தைரியமாக சமூகவலைதளத்தில் பதிவு இட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் நடிகை காஜலை மிகவும் பெருமையாக பாராட்டி வருகின்றனர். இந்த புகைப்படத்துடன் கேப்சனாக ஒரு பெரிய செய்தியையும் வெளியிட்டு உள்ளார் காஜல்.   

"இந்த உலகம் அடுத்துவர்களின் உடல் ஈர்ப்பை மையமாக வைத்தே நகர்கிறது.  பல லட்ச ரூபாய் செலவு செய்து அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி நாம் அனைவரும் நம்முடைய வெளிப்புற அழகை மேம்படுத்தி கொள்கிறோம். இந்த மாதிரியான செயல்களை விடுத்து ஒவொருவாரையும் அப்படியே ஏற்று கொள்ளும் அளவிற்கு நாம மனதளவில் தயாராக வேண்டும்.

அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி நம்மால் உடலை மட்டும் தான் அழகு படுத்தி கொள்ள முடியும் ஆனால அது நம்முடைய கேரக்டரில் எந்த மாற்றத்தையும் தராது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் நம்மை அப்படியே ஏற்று கொள்ளும் அன்பே உண்மையான அன்பு" என்று கேப்சனாக வெளியிட்டு இருந்தார்.

காஜல் இரண்டாவதாக மேக்கப் அணியாமல் பிளாக் அண்ட் வைட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.  இந்த இரண்டு புகைப்படங்களுக்கும்  பிரபலங்கள் பலரும் பல விதமாக கமெண்ட்களை பதிவு இட்டு உள்ளனர்.