படுக்கையில் செல்போன்! பாட்டுக் கேட்டுக் கொண்டே உறங்கிய இளம் பெண்! திடீரென வெடித்துச் சிதறிய பயங்கரம்! அதிர வைக்கும் காரணம்!

அஸ்தானா: பாடல் கேட்டபடி தூங்கிய சிறுமி ஸ்மார்ட்ஃபோன் வெடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.


கஜகஸ்தான் நாட்டில் உள்ள பாஸ்பேட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆல்வா அப்சல்பெக் (14 வயது). பொழுதுபோக்கு  அடிமையான இவர், இரவில் உறங்கும்போது ஸ்மார்ட்ஃபோனில் பாடல் கேட்டபடி உறங்குவது வழக்கமாகும். இந்நிலையில், நேற்று (ஞாயிறு) இரவு தூங்கச் சென்ற ஆல்வா, பொழுது விடிந்து வெகு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் பெற்றோர் சந்தேகமடைந்தனர்.

உடனடியாக, உள்ளே சென்று பார்த்தபோது, அவர் மயக்க நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தபோது, ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது.  

இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், ஆல்வா தூங்கும்போது ஸ்மார்ட்ஃபோனை சார்ஜர் போட்டுவிட்டு, தூங்கியுள்ளார். பாடல் கேட்டபடி இருக்க, சார்ஜர் நிரம்பிய நிலையில் திடீரென ஸ்மார்ட்ஃபோன் வெடித்துச் சிதறியுள்ளது. தலையின் அருகே இருந்ததால், சிறுமிக்கு காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கிறார், என தெரியவந்துள்ளது.  

ஆல்வாவின் மரணம், ஸ்மார்ட்ஃபோனை ஒருநிமிடம் கூட பிரியாமல் குடித்தனம் நடத்தும் அனைத்து நபர்களுக்கும் முன்னுதாரணம் என்றால் அது மிகையல்ல...