காடுவெட்டி குரு மகன் கனலரசனை வெட்டிக் கொலை கொலை செய்ய முயற்சி நடைபெற்று இருப்பதாகவும் அவர் உயிருக்கு பாமக குறி வைத்திருப்பதாகவும் குருவின் சகோதரி பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
காடுவெட்டி குரு மகன் கனலரசன் உயிருக்கு பாமக குறி..! வெட்டிக் கொல்ல முயற்சி என குருவின் சகோதரி வெளியிட்ட பகீர் தகவல்!

காடுவெட்டி குருவின் 2ம் ஆண்டு நினைவு தினம் கடந்த திங்களன்று நடைபெற்றது. ஊரடங்கு அமலில் உள்ளதால் குருவின் சமாதியில் அஞ்சலி செலுத்த அவரது குடும்பத்தாருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு வந்த பிறகு காடுவெட்டியில் மோதல் ஏற்பட்டுள்ளது.
தங்கள் ஆதரவாளர்களுக்கு பிரச்சனை என்றதும் குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ், மனோஜின் அண்ணன் மதன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலில் மதனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. தடுக்க முயன்ற குருவின் மகன் கனலரசன் மற்றும் மருமதகன் மனோஜூக்கும் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்கச் சென்ற குருவின் சகோதரி செந்தாமரை கூறிய குற்றச்சாட்டுகள் பகீர் ரகத்தில் இருந்தன. பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, என் அண்ணண் குருவின் மறைவுக்குப் பிறகு மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தால், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். என் அண்ணன் மகன் கனலரசனை எதாவது செய்ய வேண்டும் என மருத்துவர் குடும்பம் கொலைவெறித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
எங்கள் குடும்பத்தைப் பழி வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதைச் செய்து வருகின்றனர். கனலைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே வெட்டியுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனிடையே இந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாமக மாவட்டச் செயலாளர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.