காதல் திருமணம் செய்த காடுவெட்டி குரு மகள்! ஊரை விட்டு ஒதுக்கிய கொடூரம்! மாவீரன் மகளுக்கா இந்த நிலை?

காடுவெட்டி மகள்


வன்னியர் சங்க தலைவராகவும், பா.ம.கவின் தூண்களில் ஒருவராகவும் திகழ்ந்த மாவீரன் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை இன்று தனது அத்தை மகன் மனோஜ் கிரனை காதல் திருமணம் செய்து கொண்டார். கும்பகோணத்தில் உள்ள மனோஜ் கிரண் வீட்டில் இந்த திருமணம் அவசர அவசரமாக நடைபெற்றுள்ளது. திருமணத்தில் குருவின் மகன் கனலரசனை தவிர அவர் உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

   திருமணத்தை முடித்துவிட்டு காடுவெட்டியில் உள்ள குருவின் சமாதிக்கு சென்று விருதாம்பிகை தனது கணவர் மனோஜூடன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு குரு வாழ்ந்த வீட்டுக்கு சென்ற போது தான் பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேராக கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விருதாம்பிகை தனது கணவர், சித்தி மற்றும் சகோதரரை அழைத்துக் கொண்டு சென்றார்.   காவல் நிலையத்தில் தனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து இருப்பதாக விருதாம்பிகை புகார் அளித்தார். மேலும் தான் காதல் திருமணம் செய்ததால் காடுவெட்டி கிராமத்தில் இருந்து தன்னை ஒதுக்கிவைத்துவிட்டதாகவும், தன்னுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று அந்த கிராமத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் விருதாம்பிகை தனது புகாரில் கூறியிருந்தார்.

   மேலும் காதல் திருமணம் செய்ததால் தனக்கும், தனது கணவர் மனோஜூக்கும் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வேண்டும் என்றும் விருதாம்பிகை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆவண செய்வதாக போலீசார் கூறியுள்ளனர். காடுவெட்டி குருவின் மகளையே காடுவெட்டி கிராமத்தில் ஒதுக்கி வைத்ததாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.