கதுவா பயங்கரம்! சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு கிடைத்த நீதி!

காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் கடந்த ஜனவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.


உடனே கண்டறியப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தியாவை உலுக்கிய இந்த பாலியல் கொடூர விவகாரத்தில் 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

அதன்பிறகு நடந்த விசாரணையில், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து நான்கு நாள்கள் அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும், அதன்பிறகு சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது.   இந்தக் குற்றவாளிகளை போலீஸ் காப்பாற்ற முயல்வதாக தகவல் தெரியவரவே, நாடெங்கும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 8 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இவர்களுக்குரிய அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.