கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் காதலனின் தாய் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டார்.
இளம் பெண்ணுடன் எஸ்கேப்பான இளைஞனின் தாய்க்கு நேர்ந்த விபரீதம்!சின்னதம்பி பட பாணியில் அரங்கேற்றப்பட்ட பயங்கரம்!

சின்னத்தம்பி திரைப்பட பாணியில் காதல் கதை; காதலனின் தாய்க்கு நேர்ந்த பயங்கரம். விருத்தாச்சலத்தை அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்த செல்வி என்பவரது மகனும், கொளஞ்சி என்பவரின் மகளும் காதலித்தனர். இது பெண்ணின் தந்தையான கொளஞ்சிக்குப் பிடிக்காமல் போனதையடுத்து மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார்.
இதை அடுத்து காதலர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடிப் போனார்கள். இதன் காரணமாக இரு குடும்பத்தினர் இடையே விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்த பையனின் தாய் செல்வியை அங்கு வந்த கொளஞ்சி ஆபாசமாகத் திட்டியதாகக்கூறப்படுகிறது.
அருகில் இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த கிராம மக்கள் உடனடியாகப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.