கமலுக்கு நோ சொன்ன காஜல் அகர்வால்! இந்தியன் 2 அப்டேட்!

கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாக உள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகை காஜல் அகர்வால் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன் நிறைவு விழாவில் பேசிய கமல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தார். தாய்லாந்தில் சூட்டிங்கும் கூட துவங்கியது. ஆனால் கமல் – தயாரிப்பாளர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் லைக்கா நிறுவனம் இந்தியன் 2 திரைப்படத்தின் தயாரிப்பு உரிமையை பெற்றது.

   இதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்க உள்ளது. படத்தில் இரண்டு ஹீரோயின்கள். பிரதான ஹீரோயின் கேரக்டருக்கு நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தியன் 2வில் நடிக்க நயன்தாரா ஏகப்பட்ட கன்டிசன்கள் போட்டதாகவும் அவை அனைத்தையும் ஏற்றுக் கொண்டே அவர் ஒப்பந்த செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

   இந்தியன் 2 கதைப்படி மேலும் ஒரு ஹீரோயின் தேவை. இதற்கு பிரபல நடிகை காஜல் அகர்வாலை தயாரிப்பு நிறுவனமான லைக்கா அணுகியுள்ளது. ஆனால் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான காட்சிகள் இருப்பதாகவும், தான் 2வது ஹீரோயினாக நடிக்க விரும்பவில்லை என்றும் காஜல் கைவிரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கமலுக்கு ஏற்ற வேறு ஒரு ஹீரோயினை தேட ஆரம்பித்துள்ளது தயாரிப்பு நிறுவனமான லைக்கா.