கட்சியை விட்டு விலகுகிறார் கு.க.செல்வம்..! உதயநிதியின் அட்டகாசம் தாங்கமுடியவில்லையா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திடீரென உதயநிதியை கட்சிக்குள் இறக்கியதே பெரும்பாலான தி.மு.க. நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை.


இந்த நிலையில், கட்சியின் மிகப்பெரும் பொறுப்பாக கருதப்படும் மாவட்டச் செயலாளர் பொறுப்பை, இளைஞர் அணிக்குத் தரவேண்டும் என்று மல்லுக்கட்டினார் உதயநிதி.

அன்பழகன் இறப்புக்குப் பிறகு, அந்த இடத்தில் கு.க.செல்வம்தான் இருப்பார் என்று பலரும் நம்பினார்கள். ஆனால், தன்னுடைய ஆளான சிற்றரசுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார் உதயநிதி.

கட்சியா, சொந்த மகனா என்று வரும்போது, கருணாநிதி போலவே, வாரிசு பக்கமே நின்றார் ஸ்டாலின். அதனால் கு.க.செல்வம் புறக்கணிக்கப்பட்டு, சிற்றரசுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. இவரது நியமனத்தில் பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. சில நாட்களுக்கு முன் சிற்றரசு நடத்திய அறிமுகக் கூட்டத்திலும் கு.க. செல்வம் பங்கேற்கவில்லை.

இந்நிலையில்...ரகசியமாக பா.ஜ.க. தலைவர் முருகனுடன் டெல்லி சென்ற செல்வம், பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவை சந்தித்துப் பேசியிருக்கிறார். இதையடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பா.ஜ.க.வில் இணைவதாக சொல்லப்படுகிறது. 

இது வெறுமனே ஆரம்பம் மட்டும்தான். இன்னும் உதயநிதியின் அட்டகாசம் தாங்கமுடியாமல் ஏகப்பட்ட பெரும்புள்ளிகள் வெளியேறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. பார்க்கலாம்.