வயதில் மூத்த காதலியுடன் திருமணம் செய்யாமலேயே குடித்தனம்! புகைப்படம் வெளியிட்ட விஷ்ணு விஷால்!

விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டா தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் நெருக்கமாக இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


நடிகர் விஷ்ணு விஷால் தனது முதல் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வருடம்  விவாகரத்து   செய்தார்.  அதற்கு பின்பு நடிகர் விஷ்ணு விஷால்  விளையாட்டு வீராங்கனை  ஜுவாலா  கட்டா உடன் நெருக்கமாக பழகி வந்தார்.  இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன.  ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.   

எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோமா இல்லையா என்பதை தற்போதைக்கு சொல்ல இயலாது  என்று கூறியிருந்தார் . மேலும்   நடிகர் விஷ்ணு விஷால் விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டா வைத் திருமணம் செய்து கொள்வதற்காக தான் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ததாகவும் அதிர்ச்சியூட்டம் வகையில் தகவல்கள் வெளிவந்தன.

இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளையாட்டு  வீராங்கனை ஜூவாலா கட்டா தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் நெருக்கமாக இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  மேலும் இந்த போட்டவுடன் சில்லென்றிருக்கும் சென்னை என டேக் செய்திருக்கிறார்.

இந்த புகை படத்தின் மூலமாக இவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் அனைவருக்கும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது . ஆகவே இவர்கள் இருவரும்  விரைவில் திருமணம் செய்து கொள்வார்களா அல்லது இது போலவே நண்பர்கள் என சொல்லி கொண்டு சுற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்ன என்றால் ஜூவாலா தற்போது ஹோட்டல் எதிலும் தங்கவில்லை. நடிகர் விஷ்ணுவின் வீட்டில் தான் தங்கியுள்ளார். இதனால் திருமணம் செய்யாமலேயே இருவரும் குடித்தனம் நடத்துவதாக பேச்சுகள் அடிபடுகிறது. மேலும் விஷ்ணுவுக்கு 34 வயது மட்டுமே ஆகும் நிலையில் ஜூவலாவிற்கு 35 வயது என்பது குறிப்பிடத்தக்கது.