வாய்விட்டு சிரிக்க வேண்டுமா? தினமும் மதுவந்தி வீடியோ பாருங்க..

நகைச்சுவை நடிகர் என்று ஒய்ஜி மகேந்திரன் சொல்லிக்கொள்வார். ஆனால், அவர் நடித்த எந்த படத்தைப் பார்த்தாலும் சிரிப்பு வராது. ஆனால், இரண்டே இரண்டு வீடியோக்கள் மட்டும் போட்டு, அப்பாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டார் அவரது மகள் மதுவந்தி.


இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடி. உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையின் கூட்டுத்தொகை கூட 8,000 கோடி வராது. இந்த லூஸுக்கு மட்டும் எங்கிருந்து இவ்ளோ மக்கள் வந்தாங்க என்பதுதான் ஆச்சர்யம். கொரொனா கொண்டுபோனவர்களின் கணக்கு... கொண்டுபோகப் போகிறவர்களின் கணக்கை எல்லாம், கணக்கில் எடுக்காமல் இருந்தால்கூட 8000 கோடி மக்கள் தொகைக்கு உலகம் எங்கே போவது? 

அதில், 20 ஆயிரம் கோடி பெண்கள் என்று மற்றொரு கணக்கு வேறு. வீடியோவில் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே, டைம்ஸ் ஆப் இந்தியாவில், இந்தச் செய்தி வந்துள்ளது, அதை எல்லாம் நீங்கள் படிக்க வேண்டும் என்றும் கூறிக்கொள்கிறார்.

இவர் எந்த பள்ளியில் படித்தார் என்பதை தயவுசெய்து வெளியிட்டால் மிகவும் வசதியாக இருக்கும், இவருக்குச் சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசிரியர்களையும் வீடியோ போட வைக்கலாம்.

மோடிக்கு முட்டுக் கொடுக்க இப்படிப்பட்ட முரட்டுப் பெண் மட்டுமே இருக்கிறார் என்பதுதான் வேதனை. இந்த லட்சணத்தில் தமிழ் தகராறு என்பதால், அசால்டாக பேசிவிட்டேன், அடுத்த வீடியோவைப் பாருங்க என்று சொல்லியிருக்கிறார் மதுவந்தி.

சீக்கிரம் போடுங்கம்மா, பசிக்குது.