பிசிஓடி போன்ற பிரச்சனைகள் உங்கள் பெண் குழந்தையை நெருங்காமல் இருக்கு, இதை படியுங்கள்!

மாதவிடாய் சுழற்சி சீரற்று வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதற்கு முக்கிய காரணம் பிசிஓடி. ஹார்மோன் பிரச்சனை, உடல் பருமன், தைராய்டு, மாறிய உணவு பழக்கம் என்று பல காரணங்கள் உண்டு.


பெண் குழந்தைகள் வளரும் பருவம் முதலே உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வைக்க வேண்டும். குறிப்பாக பருவம் அடைந்த காலம் முதல் உடல் எடையில் அதிக மாற்றம் உண்டாகாமல் பார்த்துகொள்ள வேண்டும். அதிகரிக்கும் உடல் எடை பிசிஓடி மட்டும் அல்லாமல் வேறு பல பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும்.

உடலுக்கு உழைப்பு கொடுங்கள், வீட்டு வேலைகளை செய்து பழகுங்கள், உணவுகளில் கட்டுப்பாடு களும் கவனமும் தேவை. உங்கள் உயரத்தை காட்டிலும் எடை அதிகரிக்க கூடாது என்பதில் உறுதி யாக இருங்கள். பிசிஓடி பிரச்சனையை சந்திக்கும் போது அவை உடல் எடையை மேலும் அதிகரிக்க கூடும் என்பதும் நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

உணவில் பூண்டு, எள்ளு, கருப்பு தோல் உளுந்து, வெந்தயம், கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவை அடிக்கடி கொடுங்கள்.அதிக இனிப்பு நிறைந்த உணவுகள், கலோரி அதிகமுள்ள உணவுகள், மைதா உணவுகள், ஜங்க்ஃபுட் உணவுகள், நொறுக்குத்தீனிகளை கண்டிப்பாக தவிருங்கள்.