கோடைகாலம் தொடங்கி விட்டது. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், பதனீர், மோர் பல வகையான கூழ்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை உட்கொள்வதே நலம்.
கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ் உடலுக்கு எவ்ளோ குளிர்ச்சினு பாருங்க!

இவற்றை அருந்துவதால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைப்பதுடன் குடலின் நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. கம்பில் அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. இவைகள் உடலில் எளிதில் செரிமானத்தை ஏற்படுத்துகின்றன.
உடலை குளிர்ச்சியாக்கும். உடலுக்கு தேவையான சக்தியை தரவல்லது கம்பங்கூழ். இவ்வாறு பல வகையில் நமக்கு நன்மை விளைவிக்கும் இயற்கை உணவான கம்பங்கூழை அருந்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.