ஜூனியர் விகடனின் துரோகம்! கண்ணீருடன் பன்னீர்! கைகொட்டி சிரிக்கும் முதல்வர் எடப்பாடி!

குடும்பத்தோடு டூர் போனது போன்று வாரணாசிக்கு மனைவி, மகன் என்று போய்வந்த பன்னீர்செல்வம், பத்திரிகையாளர் யாரிடமும் எதுவும் சொல்லாமல் விமானம் ஏறிவிட்டார். அங்கே போய் பிண்டம் கொடுத்தது மட்டுமின்றி மோடியின் வேட்புமனு தாக்கலுக்கு உடன் நின்றார்.


அத்துடன் நில்லாமல் அமித் ஷாவுடன் ஒரு மீட்டிங், பியூஸ் கோயலுடன் ஒரு மீட்டிங் என்று கட்சியினரை தனித்தனியே சந்தித்து, தன் மகன் ரவீந்திரநாத்தை அறிமுகம் செய்து காலில் விழுவதற்குக் கற்றுக் கொடுத்தார்.

அவர் வாரணாசிக்குப் போனது பா.ஜ.க.வில் சேர்வதற்காகத்தான் என்று முதன்முதலில் கொளுத்திப் போட்டவர், பன்னீரின் மரண எதிரியான தங்கதமிழ்செல்வன்.  பா.ஜ.வுக்குப் போவதற்கு பேசி முடித்துவிட்டார் என்று பல்வேறு பத்திரிகை மற்றும் ஊடகத்தினரிடம் தங்கமே போன் செய்து தகவல் சொல்லியிருக்கிறார். அப்படித்தான் ஜூனியர் விகடனுக்கும் போன் செய்து பேசியிருக்கிறார். இது எக்ஸ்க்ளுசீவ் தகவல், வேறு யாரும் போடுவதற்கு முன்பே நீங்கள் பெரிதாக போடுங்கள். ஓ.பி.எஸ். இங்கே வரும்போதே கட்சிப் பதவியுடன் வர வாய்ப்பு உண்டு என்று ஏற்றிவிட்டாராம்.

அதனால் அட்டைப்பட செய்தியாக வெளியிட்டது. இத்தனைக்கும் ஜூனியர் விகடனுக்கும் பன்னீருக்கும் நல்ல நெருக்கம் உண்டு. பேக்கேஜ் சிஸ்டத்தில் நிறையவே விளம்பரம் வாங்கிக்கொடுத்திருக்கிறார் பன்னீர். அவர்கள் உண்மை என்று பன்னீர் விவகாரத்தை வெளியிட, சந்தி சிரித்துவிட்டது.

அதனால் டென்ஷனான பன்னீர் இப்போது கண்ணீர் மல்க அறிக்கை வெளியிட்டு மறுப்பு சொல்லிவருகிறார். தான் செத்தால்கூட அ.தி.மு.க. கொடி போர்த்தவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதைப் பார்த்து எடப்பாடி சிரித்தே விட்டாராம். இதுக்கெல்லாம் எதுக்கு விளக்கம் குடுக்குறீங்க, நீங்க சும்மா இருந்தாலே, இந்த செய்தி காணாமல் போயிருக்கும் என்று பன்னீரிடம் சொன்னாராம் எடப்பாடி.

இப்போது திருதிருவென விழிக்கிறாராம் பன்னீர்.