ஜூன் 28ல் மீண்டும் சட்டை கிழிப்பு! தயாராகும் ஸ்டாலின்!

எப்போது சட்டசபை கூடும் என்று ஆளும் கட்சியை விட அதிகம் காத்திருப்பது எதிர்க் கட்சிகள்தான்.


ஏனென்றால் சட்டமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.சட்டசபை கூடும்போது கண்டிப்பாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும் என்பது உறுதி. அதற்காகவே செந்தில்பாலாஜி, கலைராஜன், எ.வ..வேலு உள்ளிட்ட தலைகள் பத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. எல்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

அதனால் சட்டசபை கூடும் முதல் நாள், எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்காக கூட்டம் ஒத்திவைக்கப்படும் என்றாலும் அடுத்து சனி அல்லது திங்கள் கிழமை கூடும்போது சட்டசபையில் அமளிதுமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை சட்டையைக் கிழித்த ஸ்டாலினுக்கு இந்த முறை வேட்டியையும் கிழிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தயாராக இருக்கிறதாம். ஆக... ஸ்டாலின் இந்த முறை இரும்புச்சட்டை போட்டுக்கொண்டு போவது நல்லது.