மோடியை பாராட்டுவதுதான் நீதிபதியின் செயலா..? கொதிக்கும் வழக்கறிஞர்கள்

அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கவேண்டியதுதான் நீதிமன்றம். ஆனால், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களை பாராட்டிப் பேசி, அவர்களின் அன்பை பெற நீதிபதிகள் முயற்சி செய்வது குறித்து தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது.


உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாகவுள்ள அருண் மிஸ்ரா, "மோடி உலகளவில் சிந்தித்து அதை உள்நாட்டளவில் செயல்படுத்தும் ஒரு பல்துறை மேதை’ என்று புகழ்ந்திருக்கிறார். இதைக் கேட்கும் பொதுஜனத்திற்கு நீதிமன்றத்திடம் எப்படி மதிப்பு வரும் என்று கேள்வி எழுப்புகிறார், என்.ஜி.ஆர்.பிரசாத்.

இவர், மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்தல் போன்ற முக்கியமான பிரச்சினைகள் நிலுவையில் உள்ள நேரத்தில் இது போன்ற புகழுறை வருகிறது.

உச்சநீதிமன்றம் மற்றும் ஜனநாயகம், மதச்சார்பின்மை போன்ற அரசியலமைப்பு செயல்கள் சோதிக்கப்படுகின்றன.  ஒரு வலுவான மற்றும் சுதந்திரமான நீதித்துறையை வைத்திருப்பதாக பெருமை பேசும் போது மற்ற உலக நாடுகள்கள் நம்மை பற்றி என்ன நினைக்கும்.

இந்த அநாகரிக நீதிக்கு முரனாக பேசிய நீதிபதி குறைந்தபட்சம் செய்யக்கூடியது மனதார பதவி விலகுவதாகும். அரசியலமைப்பின் ஸ்தாபக பிதாக்களின் மகிமையைப் பாதுகாக்க உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் மற்றும் பிற சங்கங்கள் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.