சுர்ஜித் விவகாரத்தில் உறுதியான முடிவு வேண்டும்! எடப்பாடியிடம் வேண்டுகோள் வைக்கும் ஜோதிமணி!

சுர்ஜித்தை மீட்கும் முயற்சி நான்காவது நாளாக தொடர்ந்துவருகிறது. அருகில் இருந்து சுர்ஜித்திடன் பெற்றோரை தேற்றிவந்த ஜோதிமணி எம்.பி. இப்போது அடுத்தகட்ட உறுதியான முடிவு தேவை என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.


இதோ அவரது கோரிக்கை.  சிறுவன் சுர்ஜித்தை மீட்க பலகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. துரிதமாக பணிகள் மேற்கொள்வது குறித்த பிளான் இங்கு இல்லை. ஒரு முயற்சி தோல்வியானால் அடுத்த திட்டம் தாமதாமாக முடிவெடுக்கப்படுகிறது. 

கால தாமதம் ஏற்பட, ஏற்பட சுர்ஜித்துக்கு ஆபத்து கூடிக்கொண்டே செல்கிறது. ரிக் மூலம் குழி தோண்ட முடியாது என்பதை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் நேற்று காலை முதலே கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அரசாங்கம் முடிவு எடுக்க வேண்டும். அதிகாரிகளை முடிவு எடுக்க சொல்ல கூடாது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழு காலதாமதமாக வந்தது மீட்பு பணிக்கு பின்னடைவு தான். அமைச்சர் (அ) அதிகாரிகள் (அ) மாவட்ட ஆட்சித்தலைவர் என யார் முடிவு எடுப்பார்கள் என்பது குறித்த குழப்பம் இங்கே நீடிக்கிறது.

ஒரு கடினமான முடிவு எடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம். இந்த விவகாரத்தில் உடனடியாக முதலமைச்சர் தலையிட்டு ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டும் -என்று கோரிக்க வைக்கிறார் ஜோதிமணி.